கனடாவில் 200 வாகனங்கள் கோரவிபத்து!!

கனடாவின் கியூபெக்கிலுள்ள மாண்ட்ரீல் நெடுஞ்சாலையில் சுமார் 200 வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான பனிப்புயலால் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சாரதிகளால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பல வாகனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு மற்ற வாகனங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Blogger இயக்குவது.