திடீரென தீப்பிடித்து எரிந்தது உந்துருளி!!

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது.


பிறவுன் வீதி – நரிக்குண்டு குளம் பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தந்தையும் மகளும் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் திருத்தல் வேலை முடிந்து பயணித்த வேலை வாகனத்தில் ஏற்பட்ட எரிபொருள் ஒழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது.

வீதியில் பயணித்தவர்களின் முயற்சியினால் தந்தையும் மகளும் உயிர்தப்பினர்.
Blogger இயக்குவது.