ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை குறைக்கிறது!!!

ஒருநாளைக்கு ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய் வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 164 ஆரோக்கியமானவர்களின் தூங்கும் பழக்கம் கண்காணிக்கப்பட்டது. அதற்காக அவர்களின் கைகளின் மணிக்கட்டில் தொடு உணர்கருவி பொருத்தப்பட் டது. அதன் பிறகு அவர்களின் மூக்கில் ஜலதோஷத்தைத் தோற்றுவிக்கும் ரினோவை ரஸ் அடங்கிய திரவத்தின் சில சொட்டுக்கள் விடப்பட்டன. இவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு கூர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் எத்தனை பேருக்கு ஜலதோஷம் பிடித்தது என்று கண்காணிக்கப்பட்டது.

இந்தப்பரிசோதனையின் இறுதியில் கிடைத்த முடிவுகள் குறைவான தூக்கம் மனிதர்களின் நோய் எதிர்ப்புத் தன்மையின் வீரியத்தைக் குறைக்கிறது என்பதை உறுதி செய்திருக்கின்றன. இந்தப் பரிசோதனையில் தூக்கத்தின் கால அளவு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. தூக்கத்தின் தன்மை கண்க்கில் எடுக்கப்படவில்லை. விட்டு விட்டு தூங்குவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

மாறாக ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பது மட்டுமே கணக்கு என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆய்வின் முடிவுகளின் படி, ஒருநாளைக்கு ஏழு மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குபவர்களோடு ஒப்பிடும் போது, ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ஜலதோஷம் பிடிப்பதற் கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

யாழ். மருத்துவக்குழு.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.