அரசாங்கம் எதிர்க்கட்சியிடம் ஒத்துழைப்பு கோருகிறது!!
நாட்டு மக்கள் மீது எதிர்க்கட்சிக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால் கடன்தொகை உச்ச எல்லையை அதிகரிக்க நாடாளுமன்றத்தில் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டு 2380 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால் 4550 பில்லியன் ரூபாய் அரச செலவாகக் கணிப்பிட்டிருக்கிறது.
எனவே வரவிற்கும் அதிகமாக செலவு கணிப்பிடப்பட்டுள்ளமை கடன் பெற்றுக்கொள்வதற்காகவேயாகும். கடன் பெறாமல் எந்தவொரு அரசாங்கமும் செயற்படவில்லை. நாளொன்றுக்கான அரச செலவு சுமார் 12.5 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. மாதமொன்றுக்கு அரசாங்கத்தைக் கொண்டு செல்ல 379 ( 37900 கோடி ) பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது.
எனினும் அந்தளவுக்கு வருமானம் கிடைப்பதில்லை. எனவே மேலதிக கடனைப் பெற்றே நாட்டைக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆனால், நாடாளுமன்றம் இதற்கு அனுமதியளிக்கவில்லை.
எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பின் பிரகாரம் மார்ச் முதலாம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதிக்குக் கிடைக்கப் பெறும் அதிகாரங்களைக் கொண்டு அரசாங்கத்தை செயற்படுத்திச் செல்வதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது.
எனவே ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கோ உண்மையில் மக்கள் மீது அக்கறையிருந்தால், அவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரி கணக்கறிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo