மலேசியா தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பாகவே காணப்படும் என மலேஷியா அறிவித்துள்ளது என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விடுதலைப்புலிகள் மீதான தடையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு மலேஷிய சட்ட மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு பதிலளிக்கும் வகையில் மலேஷிய உள்துறை அமைச்சர் Muhyiddin Yassin இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு, பொது அமைதி மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான கொள்கைகளை தொடர்ந்தும் கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த காரணங்கள் காணப்படுவதாக மலேஷிய உள்துறை அமைச்சர் Muhyiddin Yassin தெரிவித்துள்ளார்.

மலேஷிய ஆளும் பக்காத்தான் ஹரப்பன் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மலேஷிய சட்ட மா அதிபர் டொம்மி தோமஸ் சர்ச்சைக்குரிய வகையில் நேற்று முன்தினம் கைவிட்டிருந்தார்.

குறித்த 12 பேரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக இருந்ததாகவும் அந்த அமைப்பை புதுப்பிக்க நிதி சேகரித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த 12 பேரின் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுவதற்கான தனது தீர்மானத்தின் காரணங்களை தெளிவுபடுத்தி, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலைக் கொண்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீள் பரிசீலனை செய்யுமாறு பரிந்துரைத்திருந்தார்.

இந்தியா, கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலிலேயே உள்ளடக்கியிருப்பதாகவும் மலேஷிய உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை குறித்த விடயத்தில் தலையிட சட்ட மா அதிபருக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.