வெடுக்குநாரிமலை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சிவராத்திரி!

வவுனியா நெடுங்கேணி நகர்ப் பகுதியிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவில் காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று அறநெறி மாணவர்கள் சூழ சிவராத்திரி நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பரம்பரை பரம்பரையாக வெடுக்குநாரி மலை ஆலயத்தில் மரபுவழி வழிபாடு, மற்றும் பூஜை முறைகள் நடைபெற்று வருகின்றது.

ஒலுமடு சந்தியிலிருந்து அடர்ந்த காட்டுப் பாதை ஊடாக 4.5 கிலோ மீற்றர் உழவு இயந்திரத்தின் மூலமும், நடந்துமே குறித்த ஆலயத்திற்கு செல்லமுடியும்.

கதிர்காம முருகன் ஆலயத்திற்கு செல்லும் ஒத்த அனுபவத்தை நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திலும் அனுபவிக்க முடியும்.

நேற்றைய தினம் பொக்கிஷம் கனடா அமைப்பின் ஒழுங்கமைப்பில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வி கற்கும் 500 அறநெறி மாணவர்கள் நெடுங்கேணி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்து சிவனை தரிசித்த அதே வேளை கலை நிகழ்வுகளையும் நடாத்தியிருந்தனர்.

இலங்கை அரசினாலும், தொல்லியல் திணைக்களத்தினாலும், பொலிஸாராலும் வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலய வழிபாட்டை நிறுத்தி குறித்த ஆலய வளாகத்தை தொல்லியல் துறை அபகரிப்பதற்காக பல நீதிமன்ற வழக்குகள் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்தாலும் மக்களின் எழுச்சியால் கடந்த மூன்று வருடங்களாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.

தமிழ் மக்களின் வரலாற்றுப் பொக்கிஷமாக கருதப்படும் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை பாதுகாக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாய கடமை என ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.