தமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனை தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வளியில்லை.அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்
தமிழ் தேசியத்தை பலவீனப்படுத்தும் சுமந்திரனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் மக்கள் தூக்கி எறிவதை தவிர வேறு வழியில்லை என்று அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் போர் குற்ற விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.என்று எம் ஏ சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் இது தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது.
உண்மையில் ஐநா சபையினுடைய போர்க்குற்ற விசாரணை இன்னும் இடம் பெறவில்லை தருஸ்மனுடைய அறிக்கை மட்டுமே நிறைவடைந்துள்ளது. இதை வைத்துக்கொண்டு நாங்கள் அதனுடைய விசாரணைகள் ஐநா போர்க்குற்ற விசாரணை நிறைவடைந்துள்ளதாக சொல்லிக்கொள்ள முடியாது. இலங்கை தமிழர்விவகாரம் ஐநாவின் உடைய வலுவான ஒரு அமைப்பை நோக்கி கொண்டு செல்ல வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். அவ்வாறு கொண்டு செல்ல வேண்டுமெனில் அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மட்டுமே என்றும், ஆனால் பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகுவது என ஐநாவுக்கு அறிவிக்க இருக்கும் நிலையில், தமிழ் மக்கள் இதனை சாதமாக பயன்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இந்த விவகாரத்தை கொண்டு செல்வதற்குரிய ஒரு ஏதுவான நிலை உண்டு என்றும், அதனை நோக்கியே தமிழர் தரப்புக்கள் நகர வேண்டும் என்றும், இது ஒரு சர்வதேச விவகாரம், 47 நாடுகள் சேர்ந்து கொண்டு வந்த தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவது என்பது.
உலகத்திலேயே சக்திவாய்ந்த அமெரிக்கா ஐரோப்பா மற்றும் மேற்குலக சக்திவாய்ந்த நாடுகளை இலங்கை அரசாங்கம் பகைத்துக் கொள்கின்ற ஒரு வேலையாகும். ஆகவே நாங்கள் எல்லாத் தரப்புக்களும் ஒன்றாக இணைந்து இந்த விடயத்தை முன்னகர்த்தி கொண்டு செல்லவேண்டும். என்றும், பொதுவாக அனைவரும் முன் வைக்கின்ற கருத்தாக இருப்பது இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கொண்டு சென்றால் சீனாவும் , ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்றும் இதனால் இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் சீனாவும் ரஷ்யாவும் இந்த அதிகாரத்தை பொறுப்பற்ற வகையில் செயற்படுத்துவதற்கு உரிய வாய்ப்புக்கள் மிக மிக குறைவு. ஏனெனில் இது தன்னுடைய நாட்டின் நலன் சார்ந்தது அல்ல, சீனா , ரஷ்யா என்பன தன்னுடைய நலனுக்கு மிகவும் நெருக்கடி வருகின்ற நிலைமையிலேயே வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முயற்சிக்கலாம். ஆகவே இந்த விடயத்தில் தமிழர் தரப்பு சீன ரஸ்யா அரசின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை .என்று தான் நினைக்கிறோம். இந்த அதிகாரம் என்பது ரஸ்யா சீனாவிற்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பு. குறிப்பாக இவ்வாறான இலங்கை விவகாரங்களில் அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் வட கொரியா போன்று நாடுகளுக்கு இடையில் ஏற்படுகின்ற நிலைமைகளின் போது அவர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்க முடியும். ஆகவே இலங்கை இந்த விவகாரத்தில் இருந்து விலக இருக்கின்ற இந்த சூழலை பயன்படுத்தி நாங்கள் இலங்கை விவகாரத்தை சர்வதேச போர்க் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல புதிய தந்திரோபாயங்களை கையாளவேண்டும்.அரசாங்கத்தின் பொறுப்புக்கூறும் விடயத்தில் தான் எமது அரசியல் தீர்வு தங்கியிருக்கிறது. இந்த விடயம் கைவிடப்படுமாக இருந்தால் எமது அரசியல் தீர்வு விவகாரமும் கைவிடபடலாம். எனவே இந்த விவகாரத்தை நாங்கள் கவனமாக கையாண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதே பொருத்தமாகும்
நேற்று முன்தினம் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் பேசுகின்ற பொழுது இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த விசாரணைகள் நிறைவு பெறவில்லை என்று யாராவது சொல்லுவார்களேயாக இருந்தால் அவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவானவர்களே என்று தெரிவித்திருந்தார். என கேட்டபோது உண்மையில் ஐநா சபையினால் தருஸ்மன் அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இவை பூரண சட்ட ரீதியான அல்லது வலுவானது அல்ல. ஆகவே சுமந்திரன் சொல்லும் இவ்வாறான கதைகளை நாங்கள் நம்ப வேண்டிய தேவை இல்லை. உண்மையில் வலுவான ஒரு விசாரணை என்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே. குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை விவகாரத்தை கொண்டு செல்வதை எம் ஏ சுமந்திரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏன் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இவ் விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முன்னாள் ஐநா மனித உரிமைப் ஆணையாளர் இளவரசர் தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஐநா சபை இணங்குகின்ற பொழுது ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுக்கிறார்கள் என்பது ஒரு சந்தேகமான விடயம் என்றும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு சுமந்திரனும் இணைந்து செயற்பட வேண்டும் இல்லையேல் சுமந்திரனை தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கி விட வேண்டும் என்றும் இதைவிட வேறு வளி இல்லை என்றும் இதேவேளை நாங்கள் நம்பியிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அல்லது தேசிய அரசாங்கம், நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்கின்ற அரசாங்கம் தங்களைஏமாற்றி விட்டதாக சுமந்திரன் சொல்கிறாரே???
பதில்...! சுமந்திரனுக்கு இலங்கை அரசியல் வரலாறு தெரியாது ஏனெனில் இலங்கை அரசியல் வரலாற்றில் எப்போதாவது பௌத்த சிங்கள பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து செய்திருக்கின்றார்களா???? உண்மையில் சுமந்திரன் அவர்கள் ரணில் அரசை தாங்கிப்பிடிக்கும் வேலையையே செய்து கொண்டிருக்கின்றார். இது வெற்று காசோலையில் கையொப்பம் இடுவதற்கு ஒப்பானதாகும், அவர் ரணில் விக்கிரமசிங்க அரசைப் பாதுகாப்பதில் குறியாக இருந்திருக்கின்றார், இவர்களுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன, அவர்கள் அதனைப் தவறவிட்டு இருக்கிறார்கள், நீங்கள் சர்வதேச சமூகத்தை திருப்திப் படுத்துவதற்காக தான் இணக்க அரசியலுக்கு சென்றோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், சரி ஏன் நீங்கள்தேசிய அரசியலை கீழே இறக்கினீர்கள், உங்களை யார் கொடிபிடிக்க சொன்னது. உங்களை சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளச் சொன்னது யார். நீங்கள் தமிழ் அரசியலின் அதனுடைய சர்வதேச அங்கீகாரத்தை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறீர்கள். குறைந்தபட்சம் நீங்கள் தமிழ் அரசியலை பாதுகாத்துக் கொண்டு எமது அரசியலை செய்து இருக்கலாம். நீங்கள் தமிழ் தேசிய அரசியலை செங்குத்தாக கீழே இறக்குகின்ற வேலையை செய்து கொண்டுதான் எதமு அரசியலை செய்து இருந்தீர்கள். இந்த நிலைமைகள்தான் இன்று தமிழ் அரசியல் இவ்வளவு மோசமான நிலைக்கு வந்ததற்கு காரணம். தமிழ் சமூகத்தை இன்று பல்வேறு வகையிலும் பிளவு படுத்தி இருக்கிறீர்கள். அரசியல் கட்சிகள் இன்று சிதறுண்டு இருக்கின்றன. அவர்களை ஒன்று சேர்த்த முடியவில்லை. முயற்சி செய்த பல நடுநிலையாளர்கள் எல்லாரும் துவண்டு போயிருக்கிறார்கள். தேசியப் பரப்பிலிருந்து அனைத்து கட்சிகளும் இன்று சிதைந்து சென்று கொண்டிருக்கின்றன. இதனால் எங்களுடைய அரசியல் தானே பலவீனமடைந்து செல்கிறது. இதறக்கெல்லாம் பாரிய பங்கு வகித்தது சுமந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் என்பதை மறுக்க முடியாது