தென் கொரியாவிலிருந்து வரும் பயணிகளிடம் விசேட சோதனை!!
தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் அனைத்து பயணிகளையும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசேட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவிலிருந்து நாட்டிற்கு வருபவர்கள் 14 நாட்களுக்கு அவதானிக்கப்படுவார்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.
தற்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தென் கொரியாவில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், தென்கொரியாவில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவளை தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo