மலேஷியப் பிரதமர் ராஜினாமாக் கடிதத்தினை கையளித்தார்!

தனது பதவியினை ராஜினாமாச் செய்வது குறித்து மலேஷியப் பிரதமர் மஹாதிர் மொஹமட் அந்த நாட்டு மன்னருக்கு அறிவித்துள்ளார்.


புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஆதரவாகவே மஹாதிர் மொஹமட் தமது ராஜினாமா கடிதத்தினை கையளித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகதன் ஹராபன் என்ற கூட்டணியினூடாக கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்ட மஹாதிர் மொஹமட், தேர்தலில் வெற்றி பெற்று அப்போது சிறையிலிருந்து அன்வர் மொஹமட்டிற்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர் பிரதமர் பதவியை கையளிப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டிலும் பிரதமர் பதவி அன்வர் மொஹமட்டிற்கு கையளிக்கப்படாத நிலையில் ஆளுந்தரப்பு கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின.

அன்வர் மொஹமட் இன்றி ஆளும் கட்சியின் சில கட்சிகள் புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையிலேயே மலேஷியப் பிரதமர் மஹாதிர் தமது ராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.