கொரோனாவால் 80 மில்லியன் மக்கள் மரணமடைவார்கள்


கொரோனாவால் 80 மில்லியன் மக்கள் மரணமடைவார்கள் – 6 மாதங்கள் முன்னரே எச்சரித்த மருத்துவர்


நிபுணர்கள் அனைவரும் அச்சத்துடன் எச்சரித்துவந்த ’வியாதி எக்ஸ்’ ஆக இருக்கலாம் இந்த கொடிய கொரோனா வைரஸ் என உலக சுகாதார அமைப்பின் வைரஸ் நிபுணர் ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மனிதர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய எதிர்கால நோய்க்கு ’வியாதி எக்ஸ்’ என பெயர் அளித்திருந்தனர்.

தற்போதைய சூழலில், சீனா தொடங்கி தற்போது உலகின் 36 நாடுகளில் வியாபித்துள்ள இந்த கொடிய கொரோனா வியாத்கியை கட்டுப்படுத்துவது கடினம் என நிபுணர்களால் கூறப்பட்டுவரும் நிலையில்,

வியாதி எக்ஸ் என்பது இதுவாகத் தான் இருக்கலாமோ என நிபுணர்கள் தற்போது சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 80,000 பேர் இதுவரை கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,600 பேருக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.

12,000 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கொரோனா வியாதியானது கடுமையான நுரையீரல் சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் பல உறுப்பு செயலிழப்பைத் தூண்டும் திறன் கொண்டது.

முக்கியமாக வயதான அல்லது நோய்வாய்ப்பட்ட நோயாளிகளிடையே மிக விரைவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் தொடர்பில் மருத்துவர் ஒருவர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையானது தற்போது நிதர்சனமாக மாறியுள்ளது.

அதில் உலகமெங்கும் காய்ச்சல் போன்ற ஒரு வியாதி பரவும் எனவும், அது ஒட்டுமொத்தமாக 80 மில்லியன் மக்களை கொன்றுவிடும் எனவும் அந்த அற்இக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியாகி ஆறு மாதங்களில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் மரியன் கூப்மன்ஸ் வெளியிட்ட கருத்து, அந்த அறிக்கையை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
Blogger இயக்குவது.