பள்ளிவாசல் ஒன்றிற்குள் புத்தர் சிலை!
கொழும்பு மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளிவாசல் கட்டிடத்தில் சிறைச்சாலை அதிகாரிகளால் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதின் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
100 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலை அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக மக்கள் வருவதை தடை செய்துள்ளனர்.
அதன்பின்னர், பள்ளிவாசலை சுத்தம் செய்யவோ அல்லது பொருட்களை எடுப்பதற்கோ கூட எவருக்கும் அனுமதி கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பள்ளிவாசல் கட்டிடம், சிறைச்சாலை அதிகாரிகளால் புனரமைக்கப்பட்டு ஓய்வெடுக்கும் அறையாக மாற்றப்பட்டு உள்ளே புத்தர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடு சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே பள்ளிவாசலில் புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த செயற்பாடானது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமை மீறல்களுக்கு எதிரானது எனவும் அவர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிஷாட் பதியூதின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் நாட்டின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo