மணல் கடத்தல் காரர்களால் பாலம் உடைப்பு!
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோத மணல்கடத்தல் காரர்களின் கனரக வாகனங்களின் போக்குவரத்தினால் கட்டிக்கொண்டிருந்த பாலம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந்தனால் இன்று 26.02.2020 புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
மன்னாகண்டல் கிராமத்தின் வசந்தபுரம் முதன்மை வீதி கடந்த ஆண்டு மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் ஓ.என்.யூ.ஆர்.திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டு இருந்தது இந்த வீதியில் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியில் இரண்டு பாலங்கள் புனரமைக்கப்பட்டிருந்தன.
இதில் ஒரு பாலம் சட்டவிரோத மணல் அகழ்வு காரர்களின் ஊர்திகள் பாவனையால் மிகபாரியளவில் சேதமடைந்துள்ளது.
இரவு நேரங்களில் அதிகளவான டிப்பர் வாகனங்கள் சட்டவிரோமான மணலினை வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் இது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த வீதியில் பாலம் அமைக்ப்படுவதால் பாலம் ஊடான போக்குவரத்தினை நிறுத்தி அருகில் வீதி அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் கட்டப்பட்ட பாலத்தின் ஊடான டிப்பர்களின் போக்குவரத்தினால் பாலம் பாரியளவில் உடைந்துள்ளது.
கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த பாலம் இதுவரை மக்கள் பாவனைக்கு விடப்படாத நிலையில் பாலத்தின் ஊடாக டிப்பர் பயணித்து சேதப்படுத்தியமை மற்றும் தொடர்ச்சியாக பேராற்று பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையினால் பேராறு அபாய நிலைக்கு சென்றுள்ளது.
விலங்குகள் சென்று இறக்கின்ற நிலமை, முதலைகளின் பெருக்கம், தொடர்ச்சியான சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரியும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo