மகிழ்ச்சியில் திழைத்த நீலகிரி தூய்மை பணியாளர்கள்!!
முதல் முறையாக மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த தூய்மை பணியாளர்களும் தங்களின் கவலை மறந்து புத்தாடை, விருந்து உபசரிப்பு கலை நிகழ்ச்சி எனக் கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம் நீலகிரியில் நடைபெற்றது.
மழை, வெயில், பனி, இரவு, பகல் என எதையும் பாராமல் நீலகிரியின் 7 லட்சம் மக்களின் குப்பைகளோடு ஆண்டுக்கு 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விட்டுச் செல்லும் குப்பைகளையும் தரம் பிரித்து ஊர் தூய்மையாக இருக்க தங்களை அழுக்காக்கிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களையும் ஒரு இடத்தில் ஒன்றிணைத்து பாராட்டு விழா நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இதற்காக ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியைத் தேர்வு செய்தனர். இவர்களுக்கு வழங்க புத்தாடை, பரிசுப் பொருள்கள், சைவ, அசைவ, உணவு வகைகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் அழைத்துவர சிறப்பு அரசுப் பேருந்துகள் என எல்லாம் தயாரானது.
காலையிலேயே நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியிலேயே குத்து விளக்கைத் தூய்மைப் பணியாளர்களை மேடைக்கு அழைத்து ஏற்றச் செய்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.
`இதை எங்க ஆயுசுக்கும் மறக்க மாட்டோம்!' -மகிழ்ச்சியில் கண்கலங்கிய நீலகிரி தூய்மை பணியாளர்கள்
இந்தச் சம்பவத்தால் அத்தனை பேரும் நெகிழ்ந்திருக்க தனது உரையைத் தொடங்கிய ஆட்சியர், ``உண்மையான போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள் நீங்கள். எங்கள் பணியைவிட உங்களின் சேவையே பெரியது'' என கையெடுத்து வணக்கம் செய்தார். இந்தச் செயலால் கண்கள் குளமாக நன்றி தெரிவித்தனர் தொழிலாளர்கள்.
உணர்ச்சிப் பொங்கும் நிகழ்வை நம்மிடம் பகிரும் 50 வயதான தூய்மைப் பணியாளர் ராச்சன், "நடுவட்டம் பேரூராட்சியில 25 வருசமா துப்புரவு பணி செய்றேன். ஊட்டியில நிகழ்ச்சி இருக்கு வாங்கனு சொன்னாங்க. காலையில 9 மணிக்கு வந்தோம். வந்து பார்த்தா ஆயிரக்கணக்கானவங்க வந்திருந்தாங்க.
மேடையில எங்கள ரொம்ப பெருமையா பேசும்போது சந்தோஷமா இருந்தது. அவ்வளோ ஒசத்தியா பேசுனாங்க, விளையாட்டுப் போட்டியில கலந்துக்கிட்டோம். அத்தனை தொழிலாளர்களும் இதை ஆயுசுக்கும் மறக்க மாட்டாங்க" எனக் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றி தெரிவிக்கிறார்.
இந்த நிகழ்வில் பங்கேற்று நெகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசிய தூய்மைப் பணியாளர் மீனா, "எனக்கு 50 வயசாகப்போகுது. 13 வருஷமா ஊட்டியில துப்புரவுப் பணிய செஞ்சுகிட்டுவர்றேன். இந்த வேலைக்கு வந்த நாள்ல இருந்து இன்னக்கி மாதிரி மனசு நிறைவா இருந்ததில்லை. எந்த வேற்றுமையும் இல்லாம அவ்வளவு சந்தோசமா கொண்டாட்டமா இருந்தது.
எங்களைப் போன்ற தொழிலாளர்கள் எல்லா ஊர்ல இருந்தும் வந்திருந்தாங்க மனசார பேசுனோம். வயிறார சாப்பாடு குடுத்தாங்க இந்த நாளை எங்க வாழ்க்கையில மறக்க முடியாதுங்க" என விவரித்தார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில், "தூய்மை பணியாளர்களைக் கௌரவிக்க முடிவு செய்து மாவட்டம் முழுவதிலும் இருந்து 1,500 தொழிலாளர்களையும் ஊட்டிக்கு வரவழைத்தோம். வந்த அனைவருக்கும் வேட்டி,சேலைகள் வழங்கப்பட்டன. சிறப்பாகப் பணியாற்றிய 122 தூய்மைப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவையும் நடத்தப்பட்டு அனைவருக்கும் சிறப்பான மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது" எனத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் ஆட்சியர் உட்பட பலரும் பணியாளர்களுடன் நடனமாடினர். மருத்துவ பரிசோதனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த தூய்மைப் பணியாளர்கள் எல்லாப் போட்டிகளிலிலும் பங்கேற்று பசியாறி மன நிறைவோடு மாலை வீடு திரும்பினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo