மன்னார் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதாக முறைப்பாடு!
மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவு மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் இடம் பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் உப காரியாலயத்தில் நேற்று முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த முறைப்பாடுகளில் ஒரு பகுதியாக மன்னார் நகர் பிரதேச செயலகத்தை சாராத சில இளைஞர்கள் ஏனைய பகுதிகளில் இருந்து பேரூந்துகளில் வருகை தந்து தங்களுடைய வாக்குகளை செலுத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் ,அடையாள அட்டையில் வேறு பகுதிகளில் வசிக்கும் முகவரி உள்ளவர்கள் மன்னார் பிரதேச செயலக பிரிவை சேர்ந்தவர்கள் என இணையத்தின் ஊடாக பதிவு செய்து வாக்களித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை 8 மணி அளவில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பிக்கும் என்று குறிப்பிட்ட நிலையிலும் கால தாமதமாகவே வாக்குப்பதிவு ஆரம்பித்ததாகவும் அதற்கான மேலதிக நேரம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் அடையாள அட்டை இல்லாத தற்காலிக இளைஞர் அடையாள அட்டைகளை வைத்திருந்த இளைஞர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை எனவும் அதனால் அனேகமான வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பாதிக்கபட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனவே குறித்த பிரச்சினை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு தலையிட்டு மீள் தேர்தல் அல்லது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை நாடளாவிய நீதியில் இளஞர் நாடாளுமன்றத்தேர்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo