சீனாவிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்!!

“ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா” என்ற சிறப்புச் செய்தியினை வெளியிட்டிருந்த பத்திரிகையாளர்களை தனது நாட்டிலிருந்து சீனா வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவை தலமையகமாக கொண்டு சீனாவில் செயல்பட்டுவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு கட்டுரை ஒன்றை கடந்த 3ஆம் திகதி வெளியிட்டது.

'ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் வெளியான அந்த சிறப்புக் கட்டுரையில், கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்தில் சீனா சரிவர செயல்படவில்லை என விமர்சித்து எழுதப்பட்டிருந்தது.

இதனால், சீனா குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததாகவும், நாட்டின் இறையான்மைக்கு எதிராக செயல்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது குற்றச்சாட்டப்பட்டது.

இந்த கட்டுரை அமெரிக்காவை சேர்ந்த ஆசிரியர் வால்டர் ருசல் மேட் என்ற ஆசிரியர் எழுதியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் கடும் கோபமடைந்த சீன அரசாங்கம், குறித்த சிறப்புக் கட்டுரையை வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியிட்ட அதன் துணை தலைமை செய்தி ஆசிரியரான அமெரிக்காவை சேர்ந்த ஜோஷ் சின், செய்தி சேகரிப்பாளர் சோ டேங்க் மற்றும் அதே பத்திரிக்கையில் பணிபுரியும் அவுஸ்திரிலியாவை சேர்ந்த மற்றொரு செய்தி சேகரிப்பாளர் பிலிப் வெங் ஆகியோர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சீன அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் துணை தலைமை செய்தி ஆசிரியர் ஜோஷ் சின் செய்தி சேகரிப்பாளர் சோ டேங்க் கடந்த திங்கள்கிழமை சீனாவில் இருந்து விமானம் மூலம் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச்சென்றனர்.

ஆனால், அவுஸ்திரிலியாவை சேர்ந்த செய்தி சேகரிப்பளர் பிலிப் வெங் மட்டும் இன்னும் கொரோனா அதிகம் பரவியுள்ள வுகான் நகரில் தான் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையாளர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டில் செயல்பட்டுவரும் சீன பத்திரிக்கைகள், செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 30 இற்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்புக்குள்ளாயிருக்கின்றன. இதற்கிடையில், இத்தாலி, தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகள் கடும் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பும் இந்த வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.