தந்தைக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு மாடியில் இருந்து குதித்த சிறுவன்!!

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வதற்கு முன்னர், தனது தந்தைக்கு‘Sorry’ என குறுந்தகவல் அனுப்பிவிட்டே கீழே குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இலங்கை மத்திய வங்கியின் 6ஆவது மாடியிலிருந்து சிறுவன் ஒருவன் குதித்து தற்கொலை செய்து கொண்டமை சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. எனினும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்த விசாரணையின் போது, சில தகவல்கள் கிடைத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மத்திய வங்கியின் உயர் அதிகாரியான தனது தந்தையை சந்திக்க நேற்று காலை 11.30 மணியளவில் அங்கு வந்த சிறுவன் 15 மாடிக்கு சென்றுள்ளார்.

பின்னர் தந்தையுடன் அரை மணித்தியாலம் வரை சிறுவன் பேசியுள்ளார். தந்தை 2 மணியளவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

இதன் போதே சிறுவன் கீழே குதித்துள்ளார். குதிப்பதற்கு முன்னர் ‘Sorry’ என குறுந்தகவல் ஒன்றை தந்தைக்கு அனுப்பியுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த சிறுவன் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற நிலையில் 6வது மாடியில் இருந்து விழுந்தமையினால் அவரது உடல் சிதறிய நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் அமைந்து இலங்கை மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து 12அடி தூரததிற்கு சடலம் சிதறிய நிலையில், சடலத்தின் பகுதிகள் ஜனாதிபதி மாவத்தையில் விழுந்து கிடந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.

எவ்வாறாயினும், அவர் தற்கொலை செய்துக் கொள்வதற்கான உறுதியான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.