பச்சிளம் குழந்தையால் சீனாவுக்குள் நடந்த அதிசயம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பிறந்த குழந்தை 17 நாட்களில் எந்தவித சிகிச்சையும் இன்றி பூரணமாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளமை மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு கடந்த 5 ஆம் திகதி அழகான பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவ பரிசோதனையில் தாய் மூலமாக குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சியோசியோ என பெயர்வைக்கப்பட்ட அந்த குழந்தையை வைத்தியர்கள் தீவிர கண்காணிப்பிற்கு உள்படுத்தினர்.

ஆனால் மற்ற கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை எதுவும் குழந்தை சியோசியோவுக்கு அளிக்கப்படவில்லை. வைரஸ் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதே தவிர வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 17 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை சியோசியோ எந்த சிகிச்சையும் வழங்கப்படாமல் தானகவே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமாகியுள்ளது.

இது குறித்து வுகான் குழந்தைகள் மருத்துவமனை வைத்தியர் சென்ங் கூறுகையில்,

'' குழந்தை சியோசியோவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவவில்லை. ஆகையால் நாங்கள் குழந்தைக்கு வைரஸ் தடுப்பு மருந்துகள் எதையும் வழங்கவில்லை. குழந்தையின் இதயம் சற்று பலவீனமாக இருந்தது. அதற்கான சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டது.

கொரோனா புதிய வைரஸ் என்பதால் அது எப்படி பிறந்த குழந்தைகளுக்கு பரவுகிறது என்பது பற்றி தெரியவில்லை. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும் போது நாம் கவனமாக செயல்பட வேண்டும்’’ என்றார்.

குழந்தை சியோசியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்ததையடுத்து கடந்த 21 ஆம் திகதியே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக வுகான் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.