காணாமல் போனோர் தொடர்பில் கருத்து தெரிவித்த கம்பன்பில!
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறும் தமிழ் அடிப்படைவாதிகள், அதற்கான சாட்சிகளை இன்னும் முன்வைக்கவில்லை என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஊகத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை று கூறினார்.
தமது நாட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கே இணை அனுசரணை வழங்கிய ஒரே நாடு இலங்கை என்ற சாதனையை 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படும்போது ஐக்கிய தேசியக்கட்சி படைத்ததாகவும், நல்லிணக்கம் என்ற போர்வையில், இருந்த நல்லிணக்கத்தையும் இழக்கும் வகையிலேயே அப்போதைய ஆளுங்கட்சியின் செயற்பாடுகள் அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றதாகவும் போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளதாக கூறும் தமிழ் அடிப்படைவாதிகள் அதற்கான சாட்சிகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியல் எங்கே? இன அழிப்பு நடைபெற்றதெனில் அதற்கான ஆதாரங்கள் எங்கே? இவையொன்றும் வெளியிடப்படவில்லை எனக் குறிப்பிட்ட உதய கம்மன்பில மாறாக ஊகத்தின் அடிப்படையிலேயே 40 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள
அதேவேளை, காணாமல்போயுள்ளனர் எனக் கூறப்படுபவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும் ஜெனிவா மாநாடு நடைபெறும்போது ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்துவார்கள்? என்றும் இவர்கள் யார் எனில் போர்காலத்தில் இலங்கையிலிருந்து தப்பிச்சென்று தஞ்சம் புகுந்தவர்களே இவர்கள் என்றும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo