வாகரையில் மணல் கொள்ளையர்கள் கைது!
வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகளின் சுற்றிவளைப்பையடுத்து கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த சந்தேக நபர்கள் மூவர் இன்று(26) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து கனரக வாகனம், உழவு இயந்திரம் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.
வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் மாதுறுஓயா ஆற்றில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரத்னபுர பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் கனரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வெள்ளாமைச்சேனை கோறளை வன காட்டுப் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் உழவு இயந்திரத்துடன் வட்டார வன உத்தியோகத்தர்களின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.
வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதுறுஓயா ஆற்றில் தொடர்ச்சியாக சட்டவிரோத முறையில் மண் அகழ்வில் மண் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo