மன்னார் நபரின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது!
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தனி நபரின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்பதோடு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரைச் சேர்ந்த இளைஞன், கடந்த 5 நாட்களாக முன்னெடுத்து வந்த குறித்த உண்ணாவிரத போராட்டம் நேற்று (புதன்கிழமை) மாலை 6.45 மணியளவில் கைவிடப்பட்டது.
மன்னாரைச் சேர்ந்த இரத்தினம் ஞானசேகரம் யூலியஸ் (வயது-39) என்ற இளைஞர் கடந்த சனிக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த நபரின் உடல் நிலையைக் கருத்திற்கொண்டு மன்னார் பிரஜைகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு வேறு வடிவத்தில் போராட்டத்தை முன்னெடுக்க ஆலோசனை வழங்கினர். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், பிரஜைகள் குழு பிரதி நிதிகள், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எம்.அசீம், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.குமரேஸ், ஜோசப் தர்மன் உள்ளிட்டோர் குறித்த இளைஞனுக்கு ஆகாரத்தை வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo