இலங்கை மீது பாயவுள்ள அடுத்த அம்பு!
இலங்கை அரசாங்கம் காலநீடிப்பு ஒன்றுக்காகவே ஐ.நா பேரவைக்கு இணை அனுசரனை வழங்கி இருந்ததே தவிர உண்மையாக தமிழருக்கு நீதி வழங்குவதற்காக அல்ல என ஐ.நா முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை பேரவையின் 43வது கூட்டத்தொடரின் ஏழாவது அமர்வு நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற்றது
அதில் 30/1 மற்றும் 40/1 பிரேரணைகளிலிருந்து விலகுவதாக ஐ.நா பேரவையில் இலங்கை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்ததை கண்டித்து நேற்றைய தினம் ஐ.நா சபை முன்றலில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா மற்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரங்சினி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைவியும் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உப தலைவியுமான ஏ.அமலநாயகி ஆகியோர் ஊடக சந்திப்பு ஒன்றினை ஐ.நா முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர்.
குறிதத் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவிக்கையில்,
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஐநாவின் 30/1 மற்றும் 40/1 பிரேரணைகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அது எமக்கு ஏமாற்றத்தை தந்தாலும் இவ்வாறு நடக்கும் என்று நாம் எதிர் பார்த்ததொன்றே. ஏனென்றால் எமக்கு தெரியும் இவர்கள் எதையும் செய்வதற்காக இந்த அனுசரணைக்கு இணைவழங்கவில்லை ஒரு காலக்கேடு நீடிப்பை பெறுவதற்காகவே இந்த இணை அனுசரனையை வழங்கி இருந்ததுடன் காலத்துக்கு காலம் பொய்களை கூறி கால நீடிப்பை இவர்கள் பெற்று இருந்தார்கள் இதற்கு எமது பிரதி நிதிகளும் துணை போய்கொண்டு இருந்தார்கள்.
இலங்கை அரசின் கபடத்தனம் சர்வதேச நாடுகளிற்கு இப்போது புரிந்திருக்கும் இலங்கை அரசு நிலைமாறுகால நீதியின் கீழ் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வந்து போன ஆனைக்குழு போல் ஒன்று என்றும் நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம் அது இப்போது மெய்த்திருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் இந்த காலநீடிப்பு ஒன்றுக்காகவே ஐ.நா பேரவைக்கு இணை அனுசரனை வழங்கி இருந்ததே தவிர உண்மையாக தமிழருக்கு நீதி வழங்குவதற்காக அல்ல என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதன்படி நாம் இப்போது கேட்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்துவந்த நாம் தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் நாடுகளுக்கு இடையில் நடக்கும் குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்றங்களிடம் பிரேரணைகளை கொண்டு வந்து Remedial Justice என்று அழைக்கப்படும் பரிகார நீதியினை பெறவுள்ளோம் என்று கூறியதுடன்.
ஐ.நா வில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளின் பிரதி நிதிகளுக்கும் நாம் தெரிவிக்கப் போகின்றோம் இலங்கையின் இந்த நிலைமாறு நிலை நீதியோ இலங்கையால் தரப்படும் எந்த நீதியோ எமக்கு தேவையில்லை நிச்சயமாக இலங்கையை சர்வதேச நீதி மன்றத்திற்கு நிறுத்தி எமக்கு பரிகாரநீதியை பெற்றுதர வேண்டும் என்று கேட்கப்போவதாகவும் கூறியிருந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo