இந்தியன் 2 விபத்தில் இறந்தவர்களுக்கு ஷங்கர் கொடுத்த நிதி உதவி!!

சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் மிக பெரிய கோர சம்பவம் நேர்ந்தது. ஆம் படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த மது, ஸ்ரீ கிருஷ்ணா, சந்திரன் எனும் மூன்று நபர்கள் மீது கிரேன் அறுந்து விழுந்து உயிரிழந்தனர்.


இதில் உயிர் இழந்த ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல cartoonist மற்றும் விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் ஆவர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உலக நாயகன் கமல் ஹாசன் ரூபாய் 1 கோடி நிதி உதவியாக கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஷங்கர் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் நான் இன்னும் அந்த துயர சம்பவத்தில் இருந்து மீளவில்லை என்றும் இந்த துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு வர பிராத்திக்கிறேன் மற்றும் உயிர் இழந்தவர்களுக்கு ரூபாய் 1 கோடி நிதி உதவியாக தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.