கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் கைவிரித்தது பிரித்தானியா!!


பிரித்தானியாவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பலவீனமானவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல், அவர்களை மரணத்திற்கு கையளிப்பதை தவிர வேறு வழியில்லை என NHS நிர்வாகம் கைவிரித்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இத்தாலி, ஈரான், பிரித்தானியா தென்கொரியா, சுவிஸ் என்று ஐரோப்பிய நாடுகளை பதம் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த நோயினால் திணறத் தொடங்கியிருப்பதாக மேற்கத்தேய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், தற்போதைய சூழலில், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா தாக்கம் மெதுவாக குறைந்துவருவதாக கூறப்படுகிறது.
வேகமாக பரவி வருவதாகவும் வெளியாகும் தகவல்கள், உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், பிரித்தானியாவில் புதிதாக மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 என அதிகரித்துள்ளது.ஆனால், நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நீடிப்பதால், பலவீனமானவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல், அவர்களை மரணத்திற்கு கையளிப்பதை தவிர வேறு வழியில்லை என NHS நிர்வாகம் கைவிரித்துள்ளது.

மேலும், பிழைப்பார்கள் என்று உறுதியாக தெரியவரும் நோயாளிகளுக்கு மட்டும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் NHS நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே நாடு முழுவதும் hand gel உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பெருமளவில் வாங்கிக் குவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Blogger இயக்குவது.