பாதுகாப்பான பயணத்துக்கான நாடுகளின் பட்டியல் - சுவிட்சர்லாந்து முதலிடம்!!
இயற்கைப் பேரழிவுகள், நாட்டின் சுகாதாரம், வன்முறைகள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் போன்ற பல்வேறு காரணிகளை ஒப்பிட்ட `insurly' என்கிற வலைதளம் 2020-ல் பயணிகளுக்கான பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் கனவு நாடான சுவிட்சர்லாந்து (Switzerland), 100-க்கு 93.4 மதிப்பெண் பெற்று முதலிடத்தில் உள்ளது. சாலை விபத்துகள் மற்றும் அதனால் உண்டாகும் உயிரிழப்புகள் போன்ற போக்குவரத்து அபாயங்களை வைத்துப் பார்க்கும்போது 98 சதவிகிதம் பாதுகாப்பான பயணங்களுக்கு சுவிட்சர்லாந்து உறுதியளிக்கிறது. சிங்கப்பூர் 92.7 மதிப்பெண்ணுடன் உலக அளவில் இரண்டாவது இடத்திலும் ஆசிய அளவில் முதல் இடத்திலும் உள்ளது. நீங்கள் சிங்கப்பூரில் பயணம் செய்யப் போகிறவராக இருந்தால் 93 சதவிகிதம் இயற்கை இடையூறுகளற்ற பயணங்களை மேற்கொள்ள முடியும்.
மூன்றாம் இடத்தில் உள்ள நார்வேக்கு 91.1 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளன. வன்முறைகள் அதிக அளவில் இருப்பதால் வட ஐரோப்பாவில் உள்ள இந்த அழகிய நகரம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. இப்பட்டியலில் ஆஸ்திரேலியா 31-வது இடத்திலும், பிரான்ஸ் 32-வது இடத்திலும், ஐக்கிய அரபு நாடுகள் 37-வது இடத்திலும், பொருளாதாரத்தில் நம்பர் ஒன் நாடான அமெரிக்கா 44-வது இடத்திலும் உள்ளது. 42.6 மதிப்பெண்களுடன் இந்தியா 122-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப்பட்டியலில் கடைசி மூன்று இடங்களைப் பிடித்துள்ள தெற்குச் சூடான், காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகள் பயணிகளுக்கு ஆபத்தான நாடுகளாக அறியப்படுகின்றன.
பயணிகளுக்குப் பாதுகாப்பான முதல் 10 நாடுகள் இவைதான்...
சுவிட்சர்லாந்து
சிங்கப்பூர்
நார்வே
லக்சம்பர்க்
சைப்ரஸ்
ஐஸ்லாந்து
டென்மார்க்
போர்ச்சுகீசு
பின்லாந்து
ஜப்பான்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo