உயர் அதிகாரிகள் முதல் பொது மக்கள் வரை தேடிய 6 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு!!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் குடியிருப்பில் இருந்து திடீரென்று மாயமான 7 வயது சிறுமியின் சடலம் ஆற்றில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில், விரிவான விசாரணைக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமி தேவனந்தாவின் உடலில் காயங்கள் உள்ளிட்ட எதுவும் காணப்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை பகல் மாயமான சிறுமியின் சடலம் இன்று காலை, குடியிருப்பின் அருகாமையில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிறுமியின் திடீர் மரணம் தொடர்பில் உறவினர்களும் பொதுமக்களும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சிறுமியின் சடலத்தில் அவரது உடைகள் எந்த சேதமும் இன்றி காணப்பட்டுள்ளது. மட்டுமின்றி உடலில் காயங்கள் எதுவும் முதற்கட்ட பரிசோதனையில் கண்டறியப்படவில்லை.

உடற்கூராய்வுக்கு என மாநில தலைநகர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரதீப்குமார் மற்றும் தன்யா தம்பதியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவர்தான் மரணமடைந்த தேவனந்தா.

வியாழனன்று பகல் குடியிருப்பில் இருந்த இவர், திடீரென்று மாயமாகியுள்ளார். சம்பவம் நடந்த போது, இவரது தாயார் துணி துவைப்பதற்காக குடியிருப்புக்கு வெளியே இருந்துள்ளார்.

துணி துவைத்து முடித்து குடியிருப்புக்கு திரும்பிய தன்யாவுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. உடனடியாக உறவினர்களிடம் தகவல் தெரிவித்த தன்யா,அதன் பின்னர் பொதுமக்கள் மற்றும் பொலிசாருடன் இணைந்து சிறுமி தேவனந்தாவை தேடியுள்ளனர்.

ஆனால் ஒரு பகல் முழுவனும் தேடியும், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை குடியிருப்பின் அருகாமையில் உள்ள ஆற்றில் மிதந்த நிலையில் சிறுமி தேவனந்தா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் சடலத்தை பார்த்த தந்தை பிரதீப்குமார், அப்படியே நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளார்.

நாட்டை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் பிணராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.