ஒரு லட்சம் வேலை வாய்ப்பு- நேர்முகத் தேர்வுகள் நிறைவு!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிக்கமைவாக 1 லட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் பலநோக்கு அபிவிருத்தி செயலணி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு நிறைவடையவுள்ளது.


அதற்கமைவாக நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் பிரதேச செயலகத்தில் 4வது நாளாகவும் இடம்பெற்றுள்ளது.

நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் தொழில் வாய்ப்புக்காக 1579 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர்.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் வழிகாட்டலில் நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் மற்றும், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவ மேஜர், கப்டன் தரத்திலான உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன.

இதேவேளை குறித்த நேர்முக தேர்வுகள் கடந்த 26 முதல் இன்று ) வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.