சீனாவில் குழந்தையொன்று பிறந்து 30 மணித்தியாலங்களின் பின்னர் கொரோனா வைரஸ் தொற்று!!

சீனாவில் குழந்தையொன்று பிறந்து 30 மணித்தியாலங்களின் பின்னர் கொரோனா வைரஸ்
தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வூஹான் பிரதேசத்தில் பிறந்த குறித்த குழந்தையின் தாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கர்ப்பத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் குழந்தைக்கு வைரஸ் தொற்று இருக்கவில்லையெனவும் எனினும் குழந்தை பிறந்ததன் பின்னர் தாயுடன் காணப்பட்ட நெருக்கம் காரணமாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான 73 பேர் கடந்த சில மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 18 ஆக உயர்வடைந்துள்ளது. 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கென உலக சுகாதார அமைப்பு நிதியுதவியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
Blogger இயக்குவது.