இந்தியாவின் ஈழ அழிப்புக் கம்பனி கம்பன் கழகம்!!

கம்பன் கழகத்தால் கௌரவிக்கப்பட்ட இருவர் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் எதாரானவர்கள் ஆகவே இது கவிஞன் கம்பனுக்கும் அவன் தந்த கவிதைக்கும் கம்பன் கழகம் செய்த துரோகம்

ஆயிரமாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்புத் துரோகத்தைச் செய்தவர் வரதராஜப் பெருமாள் பின்னர் இந்தியாவில் ஒளிந்திருந்து போர் முடிந்தபின் வந்து இந்தியாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்

மற்றவர் ஐ .நா. விற்கு சென்று இலங்கையில் நடைபெற்றது  இனப்படுகொலை இல்லை என்றும்
ஈழ யுத்தத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும்
தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை குறிக்கும் இடங்களிலெல்லாம் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதாகச் சூழுரைத்தவர்
இவருக்கு எதற்காக போராளி விருது

ஈழவிடுதலைப் போர் நடைபெற்ற போது தவறான இந்தியக்கலாச்சாரத்தை பரப்புவதாக கம்பன்கழகம் மீது கோபத்தை வீசியது பலர்
இன்று இலக்கியத்தை செய்ய வேண்டிய கம்பன் கழகம் அரசியலைச் செய்வதானது ஈழத்தில் எஞ்சிய மக்களை பிழையானவர்களின் கைப்பொம்மையாக மாற்றும் செயற்பாடாகும்

இலாக்கியம் என்பதை
இலக்கு +இயம் எனக் கொண்டால்
மக்களுக்கு சரியான பாதையைப் புகட்டுவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதே இலக்கியமாகும்

இந்த அடிப்படைத் தன்மைக்கு மாறாக விருதுகளை வழங்கி தமிழ் மக்கள் மீது கலாச்சார யுத்தம் நிகழ்த்தும் கம்பன்கழகச் செயற்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

ஏனெனில் கல்விக்கான தெய்வம் சரஸ்வதி இருக்கும் படமருகே தன் பின்பக்கத்தைக் காட்டி ஒரு மனிதன் அமர்ந்திருப்பது வேதனைக்குரிய வெட்கப்படவேண்டிய சைவ சமயத்துக்கு இழிவான செயல் இதைத்தட்டிக்கேட்க ஊடகங்களோ தமிழ்ப்பற்றாளரோ இலக்கியக்காரரோ இல்லாதது எல்லோரையும் கள்ள மௌனமாக்கி பெரும் வியாபாரச் சந்தையாகியது கம்பன் கழகம் என்பது கண்கூடே

த.செல்வா
05.02.2020
Blogger இயக்குவது.