பெண்களை உள்வாங்காத கட்சிகளுக்கு பெண்கள் வாக்களிக்க வேண்டுமா???

இலங்கையின் சனத்தொகையில் பெண்களே விகிதாசார அடிப்படையில் கூடுதலாக காணப்படுகின்றனர் ஆனால் தற்போது எதிர்வரும் தேர்தலுக்காக வேட்பாளர்களை நியமிக்க சகல கட்சிகளும் திட்டமிட்டு கொண்டு இருக்கிறது யாவரு அறிந்தவை.அவ்வாறு இருக்க சில கட்சிகள் பெண்களை புறக்கணிக்கின்றனர் அதில் சிலர் கூறுகின்றார்களாம் பெண்களுக்கு வாக்கு இல்லை என்று ...


கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் முதன் முறையாக பெண்களுக்கு கிடைத்த அரசியலில் கிடைத்த 25% வீத பெண் பிரதிநிதித்துவத்தை பெரும் சவால்களுக்கு மத்தியில் எதிர் கொண்டு சாதித்தமை சிறப்பான விடையம்,குறிப்பாக எமது சமூக பிரதேச ரீதியான பெண்கள் அரசியலில் இறங்குவதை பெரும்பாலும் ஏற்க முடியாத பலர் மத்தியில்.

ஆகவே கட்சி தலைவர்கள் சிந்திக்க வேண்டியது கட்டாய தேவை.
எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலில் பல பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர் ஆகவே பெண்களை உள்வாங்காத கட்சிகளுக்கு பெண்கள் வாக்களிக்க வேண்டுமா???

எமது பெண்கள் குடும்ப பின்னனி அரசியலுக்கு அப்பால் தனித்துவமாக களம் இறங்கியவர்கள் உதாரணமாக கடந்த கால பாராளுமன்றம் அங்கத்துவத்தை பார்த்தால் தெரிவான பெண்கள் தந்தைவழி,தாய்வழி,கணவன் வழி,பரம்பரை அரசியல் ரீதியாக இலகுவாக அங்கத்துவத்தை பெற்றவர்கள் .

இதில் ஒப்பிடும் போது எமது பெண்களின் பல திறமையானவர்கள் இருக்கின்றார்கள்.

தேர்தலில் களம் இறங்கிய எந்த ஆண்களும் தோற்கவில்லையா இதுவரை???
பெண்களுக் வாக்கு இல்லை என்று கூறும் கட்சிகளுக்கு பெண்கள்  வாக்கு சேகரிக்க தேவையா???

யாரையும் குறை கூறுவதல்ல எனது நோக்கம்  சிறப்பான ஆளுமையான கட்சி தலைவர் இருந்தால் சிந்தித்து நடப்பது சிறந்தவிடையம்.

பெண்களே நீங்கள் வாக்களிக்க மட்டும்தான் தேவையா/உங்கள் வாக்கின் பெறுமதியை வைத்து நீங்கள் தீர்மானத்தை எடுக்க தகுதியானவர்க இல்லையா ???.பெண்களுக்கு வாக்கு இல்லை என்றால் தேர்தலில் ஒரு ஆண் வெற்றி பெறும்போது ஆண்களின் வாக்கு மட்டுமா ஏற்று கொள்ளபடுகிறது??? சிந்தியுங்கள்??????

-கலைவாசு கெளரி-
Blogger இயக்குவது.