காலத்தை வென்ற கலைஞன்…!

ஈழத்தின் ஒரு கலை ஆற்றல்
இன்று விழி மூடிக்கொண்டது.
ஈகப் பெருங்கொடை கண்ட தேசத்தில்
இலட்சிய இதயம் மறைவாகிப் போனது.
சாந்தமான சிரிப்பள்ளி வீசும்
எளிமையான ஈழக் கலைஞன்.
சாமி அண்ணன் கலை வாழ்வு கண்ட
நிதர்சனமான வெற்றிப் பலவான்.


கலைஞனாய் வாழ்ந்து எங்கள்
தேசத்தை வணங்கிய தமிழன்.
களங்களில் மடிந்தவர் கனவினை
ஏந்தி நடந்த உணர்வாளன்.
குறும்பட அழகால் இதயங்கள் தொட்ட
வலிமை வடிவம் சாமி அண்ணன்.
குலமது தாங்கும் ஈகத்தில் நின்று
வரலாறாய் வாழ்வார் சாமி அண்ணன்.

“கலையாய் வாழ்ந்தாய் கலையால் வாழ்வாய்”

கலைப்பரிதி.
Blogger இயக்குவது.