ஈழ கலை துறையில் ஈடு செய்ய இயலாத இழப்பு!📷

முல்லை யேசுதாசன், உன்புடன் சாமி அண்ணா என்று அழைக்கப்படும் ஓர் நிதர்சனமான ஈழ கலைஞன்.


ஈழ மண்ணில்  ஓர் எளிமையான கலைஞன்.

தமிழீழத்தில் நான் பங்காற்றிய எள்ளாலன் திரைப்படத்தின் திரைகதை மற்றும் வசனம் எழுதியதோடு நில்லாமல் நான் கிளிநொச்சியில் இறங்கிய நிமிடம் முதல் தமிழகம் பயணிக்கும் நொடி வரை ஒவ்வொரு நாளும் என்னுடன் பயணித்து எள்ளாலன் முழு வடிவம் பெற, பல சூழல்களில் தன் உயிரையும் பொருட்படுத்தாது உழைத்த ஓர் மனிதன்.

முல்லைத்தீவில் இறுதி காட்சியின் படப்பிடிப்பிற்காக, சுனாமியால் சூரையாடப்பட்ட அவரது வீட்டிலேதான் 2 மாதம் தங்கியிருந்தேன். அவருடன் அந்த உச்சகட்ட போர் சூழலில் பல மணி நேரங்கள் உலக சினிமா, இலக்கியம், அரசியல், போரின் நீங்கா வடுக்களின் மறு பக்கங்கள், யுத்த கோரங்களுக்குள் பிறக்கும் காதல்களும் நட்புகளும் என்று அவருடன் நான் உரையாடியிருக்கிறேன்.

ஈழ நிலப்பரப்பிலும் புலம்பெயரந்த சமூகத்திலும் ஒரு சதத்திற்கும் பயண்பெறாத படைப்புகளை உருவாக்குகின்ற கலைஞர்களை கொண்டாடும் ஈழத்தமிழ் சமூகம் சாமி அண்ணன் போன்ற கலைஞர்களை அங்கீகரிக்க தவறிவிட்டது.

தான் உருவாக்கிய, பங்குபெற்ற படைப்புகளுக்காக எந்தவொரு கர்வமும், பெருமையும் தேடிக்கொள்ளாத ஓர் கலைஞன். கடைசி வரை கற்கும் தேடலை அவர் நறுத்தவேயில்லை. அவரின் இழப்பு ஈழ கலை துறையில் ஈடு செய்ய இயலாத இழப்பு.

என்றும் என் ஈழ நினைவுகளில் உங்களின் பக்கங்கள அதிகம், உங்களை தவிர்த்து என்னால் கடந்து செல்வதும் இயலாது.

-சந்தோஷ்
Blogger இயக்குவது.