தமிழர் இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவூட்டல்!

தமிழர் இயக்கமாகிய நாம் தமிழீழத்தில் எமது இறையாண்மையை வலியுறுத்தியும், சிறிலங்கா இனவழிப்பு அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கும் மற்றும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பிற்கும் நீதி கோரி பன்னாட்டு அரசியற் தளங்களில் சர்வதேச ஜனநாயக பொறிமுறைகளுக்கு உட்பட்டு தொலைநோக்குடன் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது,

அதனடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு இதுவரை அண்ணளவாக 600 இற்கும் மேற்பட்டவர்கள் தமிழர் இயக்கத்தின் ஊடாக அழைக்கப்பட் டுள்ளார்கள்.

இன்றைய சூழலில் ஐ.நா மனித உரிமைகள் அவை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகிய இரு இராசரீக தளத்திற்குள்ளும் பிரவேசிக்கும் "ACCREDITATION" என்று அழைக்கக் கூடிய "உள்நுழைவு அட்டையை" வழங்கக் கூடிய நிலையில் இயங்கும் ஒரே ஒரு புலம்பெயர் தமிழ் அமைப்பு தமிழர் இயக்கமே ஆகும்.

தமிழின அழிப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரிற்கும் உள் நுழைவு அட்டையை பெறுவதற்கான பொறுப்புத்துறப்புக் கடிதமும், தமிழீழம், தமிழகம் உட்பட பன்னாடுகளில் இருந்து கலந்துகொள்பவர்கள் VISA -கடவு அனுமதி பெறுவதற்கான கடிதங்களும் மனிதநேயத்துடனும், மனித உரிமைகள் தளத்தில் பணிபுரியும் பொறுப்புணர்வுடனுமே வழங்கப் பட்டது. இதுவே எதிர்காலத்திலும் எமது நடைமுறையாக இருக்கும்.

அதன் அடிப்படையில் தமிழீழத்தின் வடமாகணத்தின் முன்னை நாள் மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அவர்களுடன் நீண்ட காலமாக தமிழர் இயக்கம் செயற்பட்டு வருவதுடன், அவரின் மக்களுக்கான செயற்பாடுகளிற்கு உறுதுணையாகவும் இருந்துள்ளது.

அவர் தனது செயற்பாடுகளை ஐ.நா சபை வரை வந்து செயற்படுத்துவதற்கான VISA - கடவு அனுமதி பெறுவதற்கான கடிதம், "ACCREDITATION" என்று அழைக்கக் கூடிய மனித உரிமைகள் சபைக்குள் உள் நுழைவதற்கான "உள்நுழைவு அட்டை" போன்றவற்றை வழங்கி வந்தோம்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்ற வேண்டுமாயின் ஐ.நாவின் ECOSOC அங்கீகாரம் பெற்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பின் ஊடகவே உரையாற்ற முடியும் என்ற அடிப்படையில் உரையாற்றுவதற்கான வாய்ப்புக்களை இதுவரை காலமும் வழங்கிவருகின்றோம்.

அந்தவகையில் மனித உரிமை சபையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான விதிமுறைகளை பின்பற்றி உரைகள் அமைய வேண்டியது அடிப்படையானது. இந்த அடிப்படையிலே விதிமுறைகளை கவனத்தில் கொண்டே உரைகளை முன்பே மேற்பார்வை செய்வது வழமையான எமது நடைமுறையாகும்.

எமது அமைப்பின் பன்னாட்டு இணைப்பாளர் பொஸ்கோ அவர்களே இவ்வாறான விடயங்களை கையாள்வது வழக்கமாகும் கடந்த சில நாட்களாக வேறு முக்கியமான பணிகளில் பொஸ்கோ அவர்கள் ஈடுபட்டு இருப்பதனால் இவ்விடயத்தை கையாளும் பொறுப்பு தமிழர் இயக்கத்தின் ஐ.நா விற்கான இணைப்பாளரான நிசா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததோடு கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனந்தி சசிதரன் உள்ளிட்ட அனைவருக்கும் நிசா அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு முற்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் கூட்டத்தொடர் ஆரம்பித்து பிரதான அவையில் பேசுவதற்கான சந்தர்ப்பம் நெருங்கும் இறுதி நிமிடம் வரை அனந்தி சசிதரன் அவர்கள் நிசா அவர்களுடன் எவ்வித தொடர்பினையும் ஏற்படுத்தாமல் இருந்தது மட்டுமல்லாமல் எமது விடுதலைப் போராட்ட கோற்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட சில நபர்களின் ஊடாக உரையாற்றுவதற்கான சந்தர்பங்களை ஏற்படுத்துவதில் எமது இணை அமைப்பின் உள்விவகாரங்களை தன்னிச்சையாக கையாண்டமை எமக்கு தெரியவந்ததை அடுத்தே எமது சக செயற்பாட்டாளர் ஒருவர் இது குறித்து அவரிடம் நாகரீகமான முறையிலே உரிமையுடன் வினவியபோது நீங்கள் ஒன்றும் எனக்கு சொல்லத் தேவையில்லை தானே பார்த்துக்கொள்வதாக தர்க்கமாக கூறியதோடு, மறுபடியும் எமது அமைப்பின் கோட்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஆங்கில நாட்டில் இயங்கும் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் பிரதிநிதியுடன் ஐ.நா வின் ECOSOC அங்கீகாரம் பெற்ற அமைப்புக்களுக்கு பொறுப்பான அலுவலகத்தில் எம்மைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக முறைப்பாடும் செய்துவிட்டு ஐ.நா முன்னறலிலுக்கு சென்று தமிழர் இயக்கத்தின் மீதும் அதன் செயற்பாட்டாளர்கள் தொடர்பாகவும் அவதூறு பரப்பும் விதமாகவும் பேசி காணொளி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில் இவ் விடையங்கள் எவற்றிலும் தொடர்புபடாத, நாம் சம்பந்தப்படாத கற்பனைக் கதைகளை காரணம் தெரிவித்து “ தமிழர் இயக்கம்” குறிப்பாக அதன் ஐ.நா. விடையங்களை கையாளும் எமது பிரதிநிதிகளான பொஸ்கோ மற்றும் நிசா பீரிஸ் அவர்களும் தன்னை அச்சுறுத்தியதாகவும், தனது பிரதான அவையின் பேச்சை திட்டமிட்டு நிறுத்தியதாகவும் பொய்யுரைத்துள்ளார்.

தமிழர் இயக்கத்தின் மீதும் எமது செயற்பாட்டாளர்கள் தொடர்பாகவும் அவதூறு பரப்பும் நோக்குடன் அனந்தி சசிதரன் அவர்களினால் திட்டமிட்டு வெளியிடப்பட்ட காணொளி தொடர்பாக எம் முன் எழும் தார்மீகமான கேள்விகள்:

இவரை புறக்கணிக்க வேண்டும் என்ற திட்டம் இருந்திருந்தால VISA - கடவு அனுமதிக்கான கடிதத்தை நாம் ஏன் அனுப்பியிருக்க வேண்டும்?

எம் மீது திட்டமிட்டு முடுக்கிவிடப்பட்டுள்ள சில சதிகளில் இருந்து தமிழர் இயக்கத்தை தற்காத்துக்கொள்ள நாம் எடுத்த நடவடிக்கையை சற்றும் விளங்காமல், அது தொடர்பான எமது பொறுப்பாளர்களிடம் கலந்தாலோசிக்காமல் தான் ஒரு முறை பேசமுடியாமல் போனதிற்கு நிதானமிழந்து அவசரகதியில் கற்பனைக்கு எட்டிய கதைகளை எல்லாம் சுட்டிக்காட்டி தமிழர் இயக்கத்தை பொதுவெளியில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் அனந்தி சசிதரன் அவர்கள், கடந்த 6 வருடங்களாக தமிழர் இயக்கமும் பொஸ்கோ அவர்களும்தான் அவரின் ஐ. நா மனிதவுரிமைகள் சபையின் செயற்பாடுகளிற்கு துணை நின்று செயலாற்றியதை மறந்தது எம்மை சற்று கவலைக்கு உட்படுத்தியுள்ளது.

எமது செயற்பாடுகளை முடக்கவேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட வர்களின் தூண்டுதலிலேயே உண்மைக்கு மாறாக ஆதாரமற்ற தரவுகளை கற்பனை செய்து எம்முடன் எந்தவிதத்திலும் தொடர்பில்லாத நபர்களையும் யெனிவா என்ற புள்ளியில் நிறுத்தி இந்த கருத்தை கூறியுள்ளது வேதனையளிப்பதோடு தமிழர் இயக்கம் தன்னை வேண்டுமென்றே புறக்கணித்ததாக அவர் கூறும் நேர்மையற்ற கருத்தை தமிழர் இயக்கம் முற்றாக மறுக்கின்றது.

தமிழர் இயக்கமானது தமிழ் மக்களின் குரலாக தாயக, புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளின் பேராதரவோடு தமிழ் அறநெறிகளிற்கு உட்பட்டு கோட்பாடுடன் ஒத்துழைக்கும் அனைத்து தமிழ் அமைப்புக ளுடனும், தமிழர்களுடனும் இணைந்து பயணிக்கும் என்பதை இடித்துரைக் கின்றோம்.

சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக பாரிய நகர்வுகளை நாம் மேற்கொண்டுள்ள இத்தருணத்தில் எம்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அனந்தி சசிதரன் போன்றவர்களின் இத்தகைய விசமப் பிரச்சாரங்கள் தமிழர் இயக்கத்தை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருந்து கருவறுக்கும் யுத்தியை கொண்டதாகும்.

இவை சிங்கள பேரினவாத அரசின் தமிழினவழிப்பு நிகழ்சி நிரலையே பலப்படுத்தும் என்பதில் எமக்கு எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை.

அத்தோடு தாயகம் நோக்கிய எமது வேலைத்திட்டங்களிற்கு பல சவால்களிற்கு மத்தியிலும் தோளோடு தோள் நின்று உழைக்கும் அனைவரிற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெருவித்துக் கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.