நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொள்கை இல்லாதவர்கள்!

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கொள்கை இல்லாத நபர்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு தரப்பினரும் ஒன்றாக வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அழிவான அனைத்து அரங்கேற்றங்களும் நாடாளுமன்றத்தில். தற்போதைய நாடாளுமன்றத்தை விட வெலிகடை சிறைச்சாலை சிறியது.

அங்கு சாதாரண திருடர்கள் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மிகப் பெரிய திருடர்கள். கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சர்கள்.

இவர்கள் அங்குமிங்கும் தாவும் நபர்கள். கொள்கை இல்லாதவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Blogger இயக்குவது.