பம்பலப்பிட்டி ஆர்.ஏ டி மெல் மாவத்தையில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது!
பம்பலப்பிட்டி ஆர்.ஏ டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள நிர்மாணப்பணியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த கட்டிடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயினை கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது