பேருந்து நடத்துனருக்கு ஏற்பட்ட சோகம்!


வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பேருந்து நடத்துனர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக தெரியவருவதாவது ;முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து நெடுங்கேணி நொச்சியடி ஐயனார் ஆலயத்தில் வழிபாட்டிற்காக நிறுத்தப்பட்டது.இதன் போது பேருந்தின் நடத்துனர் ஆலயத்தின் உண்டியலில் பணத்தினை இடுவதற்காக வீதியை கடந்து சென்ற போது திருகோணமலையில் இருந்து முல்லைதீவு நோக்கி பயணித்த கார் அவரை மோதியது.விபத்தில் பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் நெடுங்கேணி பிரதசே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக நெடுங்கேணி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Powered by Blogger.