வெளிச்சத்திற்கு வந்தது திருவையாறு கம்பெரலிய வீதி புனரமைப்பில் இடம்பெற்ற மோசடி!!
திருவையாறு கிராமத்தில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்டு ஒரு மாத்திற்குள் சேதமுற்ற வீதி விடயம் அனைவரும் அறிந்ததே. இது தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளில் அங்கு இடம்பெற்ற மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.(விசாரணை அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.)
01.மதிப்பீட்டின்படி 100mm அளவுடைய கருங்கற்கள் வீதி வேலைக்கு பயன்படுத்தப்படல் வேண்டும் கணியச் சிட்டையிலும் அதே அளவுடைய கற்களே பயன்படுத்தப்பட்டுள்ளதாக காட்டப்பட்டிருந்தது. ஆனால் வீதியில் 70mm தொடக்கம் 80mm அளவுடைய கருங்கற்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
02.மதிப்பீட்டின் பிரகாரம் தார் முதல் தடவையில் ஒரு சதுர அடிக்கு 2 லீற்றர் வீதமும் 180 லீற்றர் அளவுடைய 10 பரல் தாரும் இரண்டாவது தடவையில் ஒரு சதுர அடிக்கு 1 லீற்றர் வீதம் 180 லீற்றர் அளவுடைய 05 பரல் தாரிடல் மேற்கொள்வதாக மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் முதலாவது வேலையின் போது ஒரு சதுர அடிக்கு 2 லீற்றர் என்ற வீதத்தில் பயன்படுத்தப்படாது 180 லீற்றர் அளவுடைய 09 பரல் மட்டுமே பயன்படுத்தி வேலை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொழில்நுட்பவியலாளரது குறிப்பு புத்தகத்தில் காட்டப்பட்டுள்ளது. இங்கு தாரிடல் மதிப்பீட்டிற்கு அமைய செவ்வனவே நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. வீதியினை நேரடி செவ்வை பார்த்தபோது வீதியில் தாரிடல் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்காமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
03.வீதி வேலையானது 2019 யூன் 30 ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்டதாக வேலை நிறைவேற்றல் அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரதேச சபையின் தவிசாளர், தொழில்நுட்பவியலாளர் ஒப்பமிடப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்த போதும் நிறைவேற்றல் அறிக்கை தயாரித்த தொழில்நுட்பவியலாளரது களவிஜய குறிப்பு புத்தகத்தில் தாரிடல் வேலையானது இரண்டாவது தடவை 2019 ஆகஸ்ட் 09 ஆம் திகதி 07- பரல் தாரிடலும் மேற்கொள்ளப்பட்டதாக காட்டப்பட்டிருந்தது. வேலை நிறைவேற்றல் அறிக்கை தயாரித்தது முன்னரும், வேலை நிறைவேற்றியமை பின்னரும் இடம்பெற்றுள்ளது. இவ் விடயமானது தொழில்நுட்பவியலாளரது களவிஜய குறிப்பு புத்தகத்தினூடாக அவதானிக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவு பெறும் நோக்கிற்காகவே வேலை நிறைவேற்றப்பட்டதாக அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு 17 முறைகேடுகள், மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன
- தமிழ்ச் செல்வன்
15.02.2020
கிளிநொச்சி.