மேஜர் கதிரொளி 16ம் ஆண்டு நினைவு நாள்!
(மேஜர் கதிரொளி கருஸ்ணபவான் சசிக்குமார்)
1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து வயது குறைந்தவர்களை படிப்பிப்பதற்காக தலைவரின் சிந்தனைக்கு அமைவாக அமைக்கப்பட்ட தமிழீழ படைத்துறைப் பள்ளியில் இணைக்கப்பட்டு
அங்கு தனது திறமைகளை வெளிப்படுத்திய கதிரொளி அதன்பின் கடற்புலிகள் அணியில் இணைக்கப்பட்டான்.அங்கு லெப் கேணல் அண்ணாச்சி (சிறி வீரச்சாவு 01.10.1999)தலைமையிலான படகு காவி அணியில் (டொக்) இணைக்கப்பட்டு அங்கும் தனது திறமையான செயற்பாட்டை நீருபித்தான்.அதன் பின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழீழத்திற்க்கு பலம் சோ்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறான் .அங்கும் இவனுடைய இ அடிப்படையில் இவனுக்கு விசேட பணி ஒதுக்கப்பட்டது
அதிலும் திறமையாக செயற்பட்டதுடன் தன் சாா்ந்த சக போராளிகளையும் தனது நகைச்சுவைப் பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுத்தான்.
அதன் பின் தாயகம் திரும்பிய கதிரொளி தாயகத்திலும் தனது பணியை திறமையாக செய்து கொண்டிருக்கும் வேளையில் 22.02.2003 அன்று வெடிபொருள் ஆய்வின் போது வீரச்சாவடைந்தான்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo