ஜேர்மனி தமிழ்ச்சங்கத்தின் நிதியுதவி மூலம் முல்லைத்தீவு மாணவர்களுக்கு உதவி!!📷

தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் கல்விமேம்பாட்டுப்பிரிவினால் ஜேர்மனி தமிழ்ச்சங்கத்தின் நிதியுதவி மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட தூரம் நடந்து சென்று கல்வி பயிலும்
பதினைந்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் கஜேந்திரகுமார் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது  இந் நிகழ்வில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் முல்லை மாவட்ட நில அளவையாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் செயற்பாட்டாளருமான அழகேந்திரம் ஆகியோர் கலந்து கொண்டனர் மேற்படி உதவிக்கான ஒழுங்குபடுத்தலை அழகேந்திரம் ஐயா அவர்கள் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.