சிம்பு தொலைந்த கனவுகள் கண்ணீர்!
பூந்தமல்லி ஈவிபி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்புக்கு இடையே கிரேன் உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இந்த விபத்தில் அசிஸ்டண்ட் இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் அஸிஸ்டெண்ட் சந்திரன், புரொடக்ஷன் அஸிஸ்டெண்ட் மது ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் நம்பிக்கை நிறைந்த சினிமாக் கனவுகள் கிரேனின் அடியில் சிக்கி சிதைவுண்டது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு திரைத்துறையினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கோரவிபத்து தொடர்பாக நடிகர் சிம்பு உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பாக சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர்தப்பியே தினமும் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகவே பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில் தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப்படுகிறது.
அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது. இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன்.
இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும். இனியொருபோதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும்.
பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo