விஜய்யை அழைக்கும் காங்கிரஸ்!
நடிகர் விஜய் காங்கிரஸில் இணைவது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
நெய்வேலியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்க்கு சம்மன் அளித்த வருமான வரித் துறை அதிகாரிகள், தங்களது காரிலேயே அவரை சென்னைக்கு அழைத்துவந்தனர். இரண்டு நாட்கள் வரை விஜய் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முதல் குரலை எழுப்பினார். மேலும் ரஜினிக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெற்ற வருமான வரித் துறை விஜய்யை நடத்திய விதம் குறித்து பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (பிப்ரவரி 21) செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரியிடம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “நடிகர் ரஜினிகாந்த் மீது வருமான வரித் துறை வழக்கு இருந்தது. அவருக்கு 66 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தினால் மேல்முறையீட்டுக்கு செல்லமாட்டோம் என ரஜினிக்கு சலுகை வழங்கப்பட்டது. அதைவிட சிறிய சலுகையைத்தான் விஜய் கேட்டார். படப்பிடிப்பை ரத்து செய்தால் தயாரிப்பாளருக்கு 2கோடி ரூபாய் நஷ்டம் வரும், ஆகவே இன்றைக்கு பதிலாக நாளை ஆஜராகிறேன், வேண்டுமானால் தனது இல்லத்தை சீல் வைத்துக்கொள்ளுங்கள் என்று வழக்கறிஞர் மூலமாக சொல்லியுள்ளார். ஆனால், விஜய்க்கு 24 மணி நேர அவகாசத்தைக் கூட வருமான வரித் துறை மறுத்துள்ளது” என்று சுட்டிக்காட்டிய அழகிரி,
ஒரே வருமான வரித் துறை, ஒரே சட்டம் ரஜினிக்கு சலுகை வழங்குகிறது, விஜய்க்கு ஏன் சலுகை வழங்கவில்லை என்றே தான் கேட்டதாகவும், இது நியாயத்தின் குரலே தவிர ஒருவருக்கு எதிராகவோ அல்லது இன்னொருவருக்கு ஆதரவாகவோ பேசப்பட்டது அல்ல எனவும் விளக்கம் அளித்தார்.
விஜய்க்கு காங்கிரஸில் சேர அழைப்பு விடுப்பீர்களா? ஏனெனில் சில ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி பேசப்பட்டது என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “விஜய் காங்கிரஸுக்கு வந்தால் மனமார ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவரை அழைக்கும் அதிகாரம் கட்சியின் மேலிடத்திற்குத்தான் உள்ளது” என்று பதிலளித்தார் கே.எஸ்.அழகிரி.
இதன்மூலம் காங்கிரஸுக்கு விஜய் வர வேண்டும் என மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.
த.எழிலரசன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo