நடந்தது இனப் படுகொலை அல்ல என்கிறார் சுமந்திரன்!!

நடந்தது இனப்படுகொலை என டப்ளின் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

நடந்தது இனப்படுகொலை என்று பிறீமன் தீர்ப்பாயம் கூறியுள்ளது

நடந்தது இனப்படுகொலை என பேராசிரியர் பொயில் கூறியுள்ளார்

நடந்தது இனப்படுகொலை என வடமாகாண சபை தெரிவித்துள்ளது

நடந்தது இனப்படுகொலை என தமிழ்நாடு சட்டசபை தெரிவித்துள்ளது

ஆனால் நடந்தது இனப் படுகொலை அல்ல என்கிறார் சுமந்திரன். தான் சட்டம் படித்ததால் தனக்கு மட்டும் அது தெரிகிறது என்கிறார்.

சரி, மேலே கூறிய அத்தனை பேருக்கும் சட்டம் தெரியாது என்றே வைத்துக் கொள்வோம்.

இப்போது எமது கேள்வி என்னவென்றால் இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்கான ஆதாரங்களை ஏன் சுமந்திரனால் இதுவரை சமர்ப்பிக்க முடியவில்லை?

நடந்தது இனப்படுகொலை என்பதை தானும் எற்றுக்கொள்வதாக கூறுகிறார்.

சட்டம் படித்த சுமந்திரன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லாமல் நிச்சயம் இனப்படுகொலை என்று ஒத்துக்கொள்ளமாட்டார்.

எனவே தனக்கு தெரிந்த அல்லது தனக்கு கிடைத்த அந்த ஆதாரங்களை ஏன் சுமந்திரன் சமர்ப்பிக்க முயலவில்லை?

இதுவரை பல ஆதாரங்களை தானே சமர்ப்பித்துள்ளதாகவும் கூறுகிறார். அப்படியென்றால் தேவையான ஆதாரங்களை என் வழங்கவில்லை?

அல்லது, இனப்படுகொலை என்பதற்கு என்ன ஆதாரங்கள் வேண்டும் என்பதை மற்றவர்களுக்குகூறி மற்றவர்களையாவது அவற்றை சமர்ப்பிக்க வைத்திருக்கலாம் அல்லவா?

கடந்த பத்து வருடமாக நடந்தது இனப்படுகொலை என நிரூபிப்பதற்கு வேண்டிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான பொறுப்பும் சுமந்திரன் மீதுதானே இருக்கிறது என்பதையாவது யாராவது அவருக்கு புரிய வையுங்கள்.


Blogger இயக்குவது.