பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் வைத்தியசாலையில்!

பேரா­தனை பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் 12 பேர் குளவிக் கொட்­டுக்கு இலக்­காகி லிந்­துலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளதாக தல­வாக்­கலை பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.


குறித்த சம்­பவம் நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்­றுள்­ளது.

மாணவர்கள் காட்­டுக்குள் நடந்து சென்று கொண்­டி­ருந்­த­போது குளவிக் கூடு கலைந்து அவர்­களை கொட்­டி­யுள்­ளது.

இத­னை­ய­டுத்து குள­வி­க­ளி­ட­மி­ருந்து தப்­பி­யோட முயற்­சித்த மாண­வர்கள் காட்­டுக்குள் பல்­வேறு இடங்­களை நோக்கி ஓடி­யுள்­ளனர்.

இந்நிலையில் தக­வ­ல­றிந்து சம்­பவ இடத்­துக்குச் சென்ற தல­வாக்­கலை பொலிஸார் மற்றும் லிந்­துலை பொலிஸார் அவர்­களைக் மீட்டு லிந்­துலை வைத்­தி­ய­சா­லை அனுமதித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.