நாவற்குழி திருவாசக அரண்மனையில் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள்!

சிவபூமி திருவாசக அரண்மனை சிவதட்சிணாமூர்த்தி திருக்கோவிலில் சிவராத்திரி தினமான இன்று சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றன காலை 6 மணி தொடக்கம் 108 சிவலிங்க களுக்கும் அடியார்கள் அபிஷேகம் செய்யக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நாட்டிய கலாகேந்திரா ஆடல் கலையகம் வழங்கும் தெய்வீக அர்ப்பணம் நிகழ்வு இரவு 7:30 மணி முதல் 11:30மணி வரை சிவபூமி திருவாசக அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய கொன்சியூலர்ஜெனரல் சங்கர் பாலச்சந்திரன் கலந்து கொள்ளவுள்ளார்

Blogger இயக்குவது.