சரஸ்வதி சிலைக்கான அடிக்கல் நாட்டும் விழா



வவுனியா செக்கடிப்புலவு அ.க.த. பாடசாலையில் சரஸ்வதி சிலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது, நேற்று காலை 10.45 மணியளவில்
மக்கள் சேவை மாமணி நாகலிங்கம் சேனாதிராஜா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.





இச் சிலையை நிறுவுவதற்கான நிதியுதவியை, லண்டனில் வசித்துவரும்  திருதி.தனஞ்சயன் சாந்தினி அவர்கள், தான் ஆரம்பக் கல்வி கற்ற இப் பாடசாலையில்,

தனது பெரிய தகப்பனார் காலஞ்சென்ற சி.சிவசிதம்பர நடராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக, சரஸ்வதி சிலையை நிறுவதற்கான ஆரம்பம் வேலைகள்,

 பாடசாலையின் அதிபர் திருமதி.T.திலகரட்ணம் அவர்களின் தலைமையில், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் ஆகியோரின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.
Blogger இயக்குவது.