சென்னை விமான நிலையத்தில் யாழ்ப்பாண என தவறான விமான டிஜிட்டல்  அறிவிப்பு!

சென்னை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள  Flight schedule board, விமான டிஜிட்டல்  அறிவிப்பு பலகையில் யாழ்ப்பாண என்று தவறாக திரையிடப்பட்டமை தொடர்பில்  இலங்கை அதிகாரி ஒருவரின் முயற்சியால் மாற்றப்பட்டுள்ளது.


சென்னை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் புறப்படும் நேரத்தை அறிவிக்கும் பலகையில் யாழ்ப்பாண என்று தவறாக திரையிடப்பட்டது. இந்த விடயம் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. இந்தத் தவறு தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் பாலச்சந்திரனுக்குத் தெரியப்படுத்தியிருந்ததுடன், அதனை யாழ்ப்பாணம் என்று சரியாகத் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டது

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் யாழ்ப்பாணம் என்று நேற்று  வியாழக்கிழமை தொடக்கம் சரியாக திரையிடப்படுகின்றது
Blogger இயக்குவது.