வதந்தியை நம்ப வேண்டாம்- பிரபல இயக்குனரின் மகன்!!
பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் சுந்தரராஜன் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவியது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். திரையுலகை சேர்ந்த பலர் அவருடைய மகனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது தனது தந்தைக்கு எதுவும் இல்லை என்றும் அவர் நலமுடன் இருப்பதாகவும் இந்த வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆர். சுந்தர்ராஜன் வதந்தி குறித்து அவருடைய மகன் அசோக் சுந்தர்ராஜன் தனது சமூக வலைத்தளத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’எனது தந்தை மிகுந்த ஆரோக்கியத்துடன் நலமுடன் உள்ளார். இப்போதும் அவர் சென்னையில் நடைபெறும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருக்கிறார். எனவே தயவு செய்து தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அவர் நீண்ட காலத்திற்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இயக்குனர் சுந்தரராஜன் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
பயணங்கள் முடிவதில்லை படத்தில் இருந்து தனது இயக்குனர் பயணத்தை ஆரம்பித்த ஆர்.சுந்தர்ராஜன், அதன் பின் நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தால், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா திருமதி பழனிச்சாமி உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கேரக்டரில் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo