கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தீவைப்பு!

ஈரானில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்ட மருத்துவமனைக்கு பொதுமக்கள் தீவைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வேறொரு நகரத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் ஈரானின் தென்பகுதி நகரமான பன்தார் அப்பாஸ் என்ற இடத்திலுள்ள மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ஈரானிய அரசின் இந்த முடிவால் ஆத்திரமடைந்த அப்பகுதியிலுள்ள மக்கள் அந்த வைத்தியசாலைக்கு தீ வைத்துள்ளனர்.

இதேவேளை புதிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானில் குறைந்தது 210 பேர் இறந்துள்ளனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரானில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கான மருத்துவ உபகரணங்களை வழங்க முடியுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு ராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.