இணையத்தில் வைரலான ராஷ்மிகாவின் Back flip!!

தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமான நடிகர் மகேஷ் பாபு, தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். நடிகர் மகேஷ் பாபு நடித்து, அணில் ரவிப்புடி இயக்கிய காமெடி கலந்த சண்டை படமான "சர்ரியலேரு நிவ்வரு"  ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


தற்போது இப்படக்குழு ஒரு  பாடலை இணையத்தில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. "Mind Block" என்ற இந்தப் பாடலில் நடிகை ராஷ்மிகா தனது அசத்தலான நடனத்தின் மூலம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறார்.

பம்பரமாய் சுழன்று ஆடும் நடிகை ராஷ்மிகா இந்தப் பாடலின் தொடக்கத்தில் back flip அடித்து அசுரத்தனமான நடினத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ராஷ்மிகாவின் back flip ஐ பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து அவரைப் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே தென்னிந்தியா முழுவதும் நடிகை ராஷ்மிகாவுக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்தப் பாடல் மேலும் அவரை குசியில் ஆழ்த்தி இருக்கிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.