சூர்யாவின் சகோதரி பாடிய பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் ஜேஜே ப்ரட்ரிக் இயக்கிய ’பொன்மகள் வந்தாள்’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வா செல்லம்’ என்று தொடங்கும் இந்த பாடலை சிவகுமாரின் மகளும் சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். முதல் முறையாக பிருந்தா சிவகுமார் பாடிய இந்த பாடல் இன்று சிங்கிள் பாடலாக வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப்போத்தன், பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஜோதிகாவின் இன்னொரு வெற்றிப்படமாக இருக்கும் என கருதப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo