அருவா டைட்டிலை மறுத்த பிரபலங்கள்!!

சூர்யா நடிப்பில் ஹரி இயக்குவதாக இருக்கும் திரைப்படத்திற்கு ’அருவா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.


இந்த நிலையில் இந்த டைட்டிலை ஹரி கூறிய போது ஒரு சில முன்னணி நடிகர்கள் வேண்டாம் என்று கூறிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சிம்பு நடிப்பில் ஹரி இயக்கிய திரைப்படத்திற்கு கோவில் என்ற டைட்டில் வைப்பதற்கு முன்பே ’அருவா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாம். அதேபோல் தனுஷ் நடித்த ’வேங்கை’ படத்திற்கு முதலில் ’அருவா’ டைட்டிலைதான் ஹரி தேர்வு செய்து இருந்தார். ஆனால் சிம்பு, தனுஷ் ஆகிய இருவரும் இந்த டைட்டில் வேண்டாம் என்று மறுத்து விட்டதால் ’கோவில்’ மற்றும் ’வேங்கை’ ஆகிய டைட்டில்கள் வைக்கப்பட்டது.

இதேபோல் விஷால் நடித்த ’பூஜை’ படத்திற்கும் ’அருவா’ டைட்டிலை தேர்வு செய்ததாகவும் விஷாலும் இந்த டைட்டிலுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்த்தி நடிப்பில் ஹரி இயக்கவிருந்த படத்திற்கும் ’அருவா’ டைட்டில் வைக்கப்பட்டதாகவும், ஆனால் இந்த படம் எதிர்பாராத காரணத்தால் டிராப் ஆகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவிடம் கதை சொல்லும்போதே முதலிலேயே ’அருவா’ என்ற டைட்டிலை சொல்லிவிட்டுத்தான் ஹரி கதை சொல்லியதாகவும் கதைக்கு மிக பொருத்தமாக இந்த டைட்டில் இருப்பதால் ’அருவா’ டைட்டிலுக்கு சூர்யா ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.